Skip to main content

கை கூப்பி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஆதிபுருஷ் வசனகர்த்தா

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

adipurush co writer Manoj Muntashir apology for hurt peoples emotions

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி 3டியில் வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் மோசமான வரவேற்பைப் பெற்ற நிலையில் வசூலில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

 

இப்படம் ரிலீசுக்கு முன்பே இந்து மத உணர்வைப் புண்படுத்தியதாக பல்வேறு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் ரிலீசுக்கு பின்பும் அது தொடர்கிறது. அந்த வகையில் இப்படத்தில் வசனங்கள் சர்ச்சையை உருவாக்குவதாக இரண்டு பொதுநல மனுக்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், "படத்தில் ராமர், சீதை, அனுமன், ராவணன் எல்லோரையும் திரையில் காட்டிவிட்டு இது ராமாயணம் இல்லை என பொறுப்புத் துறப்பு வாசகம் போடுவீர்கள்... அதை நாட்டு மக்களும் இளைஞர்களும் நம்புவார்கள். அவர்கள் மூளையற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா" என சரமாரி கேள்வியை நீதிமன்றம் படக்குழுவினருக்கு எழுப்பியது. 

 

இந்நிலையில் இப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆதிபுருஷ் படத்தால் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். கூப்பிய கைகளுடன் எனது நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன். நமது புனிதமான சனாதனத்துக்கும் மகத்தான தேசத்திற்கும் சேவை செய்ய அனுமன் பகவான் நம்மை ஒன்றிணைத்து நமக்கு பலம் தரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவுக்கு தனியாகச் செல்ல வேண்டாம் எனத் தோழிகளிடம் கூறினேன்” - பிரபல எழுத்தாளரின் பரபரப்பு கருத்து

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
sensation by America writer says I have told my friends not to go to India alone

ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். 

இதுவரை இத்தாலி, ஈரான் எனப் பல நாடுகளுக்குச் சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். அந்த வகையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கினர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில், குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.

sensation by America writer says I have told my friends not to go to India alone

இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான டேவிட் ஜோசப் வோலோட்ஸ்கோ, இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் வாழ்ந்தபோது, நான் கண்ட பாலியல் தொல்லைகள் போல் வேறு எங்கும் கண்டதில்லை. சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்தாலும், துன்புறுத்தப்படாமலோ அல்லது தாக்கப்படாமலோ அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்படாமலோ கூட ஒரு பெண் பயணியை நான் சந்தித்ததில்லை.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக இந்தியா எப்போதும் இருக்கும். ஆனால் அங்கு தனியாக பயணம் செய்ய வேண்டாம் என்று பெண் தோழிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். இந்திய சமூகத்தில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாகவே இருக்கிறது. இதில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.  

Next Story

நடிப்பிற்கு சின்ன பிரேக் விடும் பிரபாஸ்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Prabhas take a short break from cinema

பிரபாஸ், சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனமே பெற்ற இப்படம், உலகளவில் ரூ. 600 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் தி ராஜா சாப், சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட், இந்தியில் நாக் அஷ்வின் இயக்கும் கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இப்படி வரிசையாகப் படங்களை கமிட் செய்துள்ள பிரபாஸ் தற்போது நடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலையை பாதுகாப்பதற்காக ஒரு மாதம் ஓய்வெடுத்து, அடுத்த மாதமான மார்ச்சில் மீண்டும் நடிப்புக்கு திரும்ப பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சலார் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதால், அடுத்து எவ்வாறு முன்னோக்கி செல்லலாம் என திட்டம் தீட்டவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.