அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘லவ் மேரேஜ்’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கலாட்டா காமெடி படமாக உருவாகியிருந்திருந்தது. 

30 வயதிற்கு மேற்பட்ட ஆண் மகனுக்கு இன்றைய சூழலில் திருமணம் என்பது எந்த அளவு எட்டாக்கனியாக இருக்கிறது. அதை ஒரு குடும்பம் எப்படி எல்லாம் சமாளித்து அதில் இருந்து மீண்டு திருமணம் நடத்தி வைக்கின்றனர் என்ற இன்றைய சமகால நிகழ்வுகளை இப்படம் பேசியிருந்தது. கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், “லவ் மேரேஜ் படம் பார்த்து மகிழ்ந்தேன். விக்ரம் பிரபுவின் நடிப்பு சூப்பராகவும் புதுமையாகவும் இருந்தது. மேலும் காமெடி காட்சிகளிலும் எமோஷ்னல் காட்சிகளிலும் அவரது நடிப்பு நேர்த்தியாக இருந்தது. அவரது கேரக்டரோடு என்னை மாதிரியான 90ஸ் கிட்ஸுகள் கனெக்ட் பண்ணிக்க முடியும். 

492இயக்குநர் பிரியன் பிரதர் சிறப்பாக கதை எழுதி அதை படமாக்கியுள்ளார். படத்தின் பலமான தூணே ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் தான். இந்த சூப்பர் ஹிட் குடும்ப பொழுதுபோக்கு படத்தை உங்களுக்கு அருகில் உள்ள தியேட்டருக்கு சென்று பாருங்கள்” என பதிவிட்டுள்ளார். விக்ரம் பிரபுவின் சகோதரி ஐஸ்வர்யாவைத் தான் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் என்பதும் நினைவுக்கூரத்தக்கது.