adhik ravichandran about ajith

திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பியுள்ளார். மேலும் அஜித்குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி துபாயில் நடந்து முடிந்த 24ஹெச் சீரிஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பல்வேறு கார் ரேஸ் போட்டிகளில் அஜித் கலந்து கொள்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அஜித் ரேஸில் கலந்து கொள்ளும் வீடியோக்களை அவர் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அஜித் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் பலன் கிடைக்கும் அஜித் சார். இது மிகவும் கடினமான விளையாட்டு. நீங்கள் செலுத்திய அர்ப்பணிப்பும் அசாதாரணமானது. நீங்கள் பெற வேண்டிய அனைத்தையும் பெற பிரார்த்திக்கிறேன். லவ் யூ சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Advertisment