Advertisment

நட்பிற்கு மரியாதை செய்யும் ‘ஹிப் ஹாப் தமிழா’

hiphop adhi

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். தற்போது ஆதியின் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சியே தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. டி.பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக உருவாகியுள்ளது. மேலும் இதன் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஹாக்கி விளையாட்டு தவிர படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்கள் நிறைந்த குடும்ப படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளது. இப்படத்தில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த், வினோத்,குகன், ‘புட் சட்னி’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

natpe thunai hiphop adhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe