Advertisment

புது லுக்கை ரிலீஸ் செய்த கே.ஜி.எஃப். படக்குழு!

adheera

Advertisment

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும்பிரம்மாண்டமாக வெளியான படம் கே.ஜி.எஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, கே.ஜி.எஃப்.-2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. இந்த படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்றது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது.

முதலில் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்தது.

Advertisment

இப்படத்தில் ‘ஆதிரா’ என்னும் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.ஜூலை 29ஆம் தேதி கொடூரத்தை அறிமுகப்படுத்தபோவதாக சில நாட்களுக்கு முன் கே.ஜி.எஃப்.-2 படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் ‘ஆதிரா’ கதாபாத்திர லுக்கை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. வைக்கிங்ஸின் கொடூரத்தின் மூலம் இன்ஸ்பையர் ஆகியிருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Sanjay Dutt
இதையும் படியுங்கள்
Subscribe