Advertisment

"அப்பா நான் உன்ன ஜெயிக்க வைப்பேன்"  - கவனம் ஈர்க்கும் அதர்வா பட க்ளிம்ப்ஸ்! 

adharva starring Trigger movie Glimpse video goes viral

Advertisment

இயக்குநர்ஆர். கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா ‘தள்ளி போகாதே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். 'தள்ளி போகாதே படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடிகர் அதர்வா அடுத்ததாகஇயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘ட்ரிக்கர்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாகநடிக்க, அருண்பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தைபிரதீக் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஸ்ருதி நல்லப்பா தயாரிக்கிறார்.இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “ஒரு தந்தையும் அவரது துப்பாக்கியையும் மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. நடிகர் அதர்வா அந்தத் துப்பாக்கியின் ட்ரிக்கரைஇயக்குவாரா இல்லையா என்பதேஇப்படத்தின் கதை. அதற்காகத்தான் இப்படத்திற்கு ட்ரிக்கர் என்று தலைப்பு வைத்தோம். இதைவிட வேறு தலைப்பு இப்படத்திற்கு பொருத்தமாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்பஸ்வீடியோ, யூடியூப் தளத்தில் 3 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அனைவரதுகவனத்தையும் ஈர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

adharva tanya ravichandran Trigger movie
இதையும் படியுங்கள்
Subscribe