அதர்வா நடிப்பிக் கடைசியாக வெளியான படம் கட்டலகொண்டா கணேஷ் என்னும் தெலுங்கு படம். இதன்பின் அவர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதிஆட்டம், ஆர் கண்ணன் இயக்கத்தில் படமொன்றில் நடித்து வருகிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக அஸர்பைஜான் செல்லவிருந்த அதர்வா துபாய் விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு பெய்து வரும் கனமழையால் துபாயில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் துபாய் விமான நிலையத்திலேயே நடிகர் அதர்வா 24 மணிநேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்துள்ளார். கனமழை நின்றபின் விமான நிலையத்திலுள்ள ஓடு பாதைகளை சரிசெய்து பின்னர் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் அதர்வா. திங்கள்கிழமை மதியம் அஸர்பைஜான் சென்று படக்குழுவுடன் இணைந்துள்ளார். அஸர்பைஜானில் இந்த படபிடிப்பானது வருகிற 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், அமிதாஸ் பிரதான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.