'100' சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதர்வா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் படம் இது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். அவுரா தயாரிப்பு நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏன் டி ராசாத்தி’என்னும் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்ராயண் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.
வருகின்ற மே 3ஆம் தேதி ‘100’ படம் திரையரங்குகளில் வெளியாகுகிறது.