நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு சென்சார் செய்யப்பட்ட ஜி.வி.பிரகாஷ் படம்!

gv prakash

சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அடங்காதே'. இப்படத்தில், சுரபி, தம்பி ராமையா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு படத்தின் ட்ரைலர் வெளியானது. அதன் பிறகு, படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அடங்காதே படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, திரைப்படத் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டு அடங்காதே திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

GV prakash
இதையும் படியுங்கள்
Subscribe