Skip to main content

நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு சென்சார் செய்யப்பட்ட ஜி.வி.பிரகாஷ் படம்!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

gv prakash

 

சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அடங்காதே'. இப்படத்தில், சுரபி, தம்பி ராமையா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

 

இப்படத்தின் பணிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு படத்தின் ட்ரைலர் வெளியானது. அதன் பிறகு, படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அடங்காதே படத்தின் சென்சார் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, திரைப்படத் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டு அடங்காதே திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்