Advertisment

“நாடக காதல், ஆணவக் கொலை குறித்து நடுநிலையாக ஒரு படம்”- ஜிவி பிரகாஷ் பட இயக்குனர் அதிரடி

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் அடங்காதே. இந்த படத்தை இயக்கியவர் சண்முகம் முத்துச்சாமி. இந்த படத்தின் டீஸர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி பலரது எதிர்பார்ப்பை கூட்டியது. ஆனால், இன்னும் இந்த படம் வெளியாகாமல் உள்ளது.

Advertisment

director shanmugam

Advertisment

இந்நிலையில் நாடக காதலை மையப்படுத்தி திரௌபதி என்ற படமும், ஆணவக் கொலையை மையப்படுத்தி கன்னி மாடம் என்ற படமும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களையும் ஒவ்வொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து மற்ற படத்தினை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அடங்காதே படத்தின் இயக்குனர் தன்னுடைய அடுத்த படம் நாடக காதல், ஆண்வக் கொலை குறித்து நடுநிலையாக ஒரு படம் பண்ண வேண்டும் என்பதுதான் என்று சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “வேற வழியில்லை... வெகு விரைவில் நாடகக் காதல் என்ற வார்த்தை ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், ஆணவக் கொலைகள் பற்றிய நடுநிலையான பார்வையோடு ஒரு சினிமா எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

draupathi kollywood
இதையும் படியுங்கள்
Subscribe