style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் 'அடங்க மறு' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. கார்த்திக் தங்வேல் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் நவம்பர் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதே வாரத்தில் ரஜினியின் '2.0' படமும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.