பிரபல தொகுப்பாளரானரம்யா, மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.இதனையடுத்து ஒருசில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் 'மாஸ்டர்' படத்திலும் நடிக்கிறார். ட்வீட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வருபவர் ரம்யா. தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், "சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளப்போகிறேன். எல்லாம் நன்மைக்கே. இந்த லாக்டவுனின் கடைசி வாரத்தை மெதுவாகக் கழிக்க விரும்புகிறேன். கவலைப்பட வேண்டாம், நான் முற்றிலும் நலமுடன் இருக்கிறேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us