Advertisment

இப்படியே நீண்ட நேரம் இருக்க முடியாது - மருத்துவமனையில் சந்தானம் பட கதாநாயகி

actress Vishakha Singh in hospital

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான 'பிடிச்சிருக்கு' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஷாகா சிங். பின்பு சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'கண்ணா லட்டு திண்ண ஆசையா' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்பு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது 'தி மாயா டேப்' என்ற இந்தி படமும் 'துரம்' என்ற தெலுங்கு படமும் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. நடிப்பை தாண்டி தயாரிப்பாளராகவும் தொழிலதிபராகவும் பயணித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விஷாகா சிங் தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்த அவர், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே என்னால் இருக்க முடியாது. இலையுதிர் காலம், குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் அடிக்கடி ஏற்படும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்குப் பிறகு மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கிக்காத்திருக்கிறேன்.

Advertisment

ஏப்ரல் எப்போதும் எனக்கு உண்மையான புத்தாண்டாகவே இருந்தது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதால், அல்லது இது எனது பிறந்த மாதத்தின் முந்தைய மாதம்என்பதால் இருக்கலாம்.கோடை நாட்களை நோக்கி முழு ஆர்வத்துடன் ஆரோக்கியமாக முன்னேறி வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe