Advertisment

சென்னையில் இருந்தபோது அதிர்ச்சியடைந்தேன்... நடிகை வேதிகா ட்வீட்!

Vedhika

சென்னையில் இருந்தபோது யாரும்முகக்கவசம் அணியாததைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகை வேதிகா தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் வேகமெடுத்துள்ள கரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மருத்துமனைகளில் நிலவும் படுக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தடுமாறிவரும் மத்திய மற்றும் மாநில அரசுகள், முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாகப் பின்பற்றும்படி பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றன. இருப்பினும், பெரும்பாலான நபர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி செயல்படுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

Advertisment

நடிகை வேதிகா இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நான் சென்னையில் இருந்தபோது யாரும் முகக்கவசம் அணியாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். நீங்கள் மாஸ்க் அணிந்து பொறுப்புடன் நடந்து கொள்கிறீர்கள் என்றால் பாராட்டுகள். மாஸ்க் அணிவதே இத்தகைய நாட்களில் சூப்பர் ஹீரோவாகஇருப்பதற்கு எளிமையான வழி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Vedhika
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe