/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vara_0.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி படங்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றநிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் கமலுடன் நடித்துவருகிறார்.இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குலரெண்டுகாதல்' படத்திலும்நடித்துவருகிறார்.
இதனைத்தொடர்ந்து இயக்குநர்ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும்'மைக்கேல்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து கரண் சி. ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில் மைக்கேல்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)