vanitha vijayakumar

நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.

Advertisment

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா, அவர் தங்களிடம் இருந்து பணம் பெறவே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனைச் சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகையும் இயக்குனருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில், “தற்போதுதான் இந்தச் செய்தியைப் பார்த்தேன். அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. எப்படிப் படிப்பும், புகழ் வெளிச்சமும் உள்ளவர் இப்படியான ஒரு தவறை செய்ய முடியும்? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவருடைய முதல் மனைவி ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை?” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள வனிதா, “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களுக்குத் தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துகளையும் நீங்கள் சொல்ல வேண்டாம்.

மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படிச் சரிபடுத்துவது என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்குத் தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.