Advertisment

நடிகை வாணிஸ்ரீயின் பல ஆண்டு போராட்டம்; கைகொடுத்த முதல்வர் திட்டம்

actress vanisri get his property through cm stalin new scheme

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு பல படங்களில் ஜோடியாக நடித்து வந்தவர் வாணி ஸ்ரீ. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இப்போது செங்கல்பட்டு மாவட்டம் ஆனூரில் வசித்து வருகிறார். இவரது மகன் வெங்கடேஷ் கார்த்தி கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

இதனையடுத்து சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் வாணி ஸ்ரீக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரப்பதிவு மூலம் விற்றுள்ளார்கள். இந்த நிலத்தை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பல வருடங்களாக போராடி வருகிறார் வாணி ஸ்ரீ. ஆனால் அவரால் இழந்த நிலத்தை மீட்க முடியவில்லை.

Advertisment

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் புதிய நடைமுறையை, மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வாணி ஸ்ரீ தான் இழந்த நிலத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார். இதற்கான ஆணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வாணி ஸ்ரீயிடம் வழங்கினார். புதிய சட்டம் மூலம் இழந்த நிலத்தை மீட்டுள்ளதால் முதல்வருக்கு வாணி ஸ்ரீ நன்றி தெரிவித்துள்ளார்.

Actress cm stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe