Actress Urvashi rautela praying for Rishabh Pant

உத்தராகண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்தார். ரூர்க்கி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பலத்த காயம் அடைந்துள்ளார். உத்தராகண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ரிஷப் பந்த் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரிஷப் பந்த் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றும், அவருக்கு எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் ரிஷப் பந்த்திற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும், முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

முன்னதாக ரிஷப் பந்த், நடிகை ஊர்வசிராவ்டேலாவைக் காதலித்ததாகச் செய்திகள் வெளியானது. ரிஷப் பந்த் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ரிஷப் பந்த் பெயரைக் குறிப்பிடாமல் குணமடைய பிரார்த்திப்பதாகஊர்வசிராவ்டேலா தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில், "உங்கள் நலனுக்காகவும்உங்கள் குடும்பத்தின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்." என நடிகை ஊர்வசி ராவ்டேலா பதிவிட்டுள்ளார்.