Advertisment

சக நடிகருடன் காதல்; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை தற்கொலை! விசாரணையில் பகீர் தகவல்!

actress Tunisha Sharma case co actor Sheezan Khan statement

இந்தி திரையுலகில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை துனிஷா சர்மா. சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி ‘அலி பாபா தஸ்தான் இ காபூல்’ எனும் தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது படப்பிடிப்பின் இடைவெளியில் மேக்கப் அறைக்கு சென்ற துனிஷா சர்மா, நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் படக்குழுவினர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

Advertisment

உடனே துனிஷா சர்மாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துனிஷா சர்மாவின் தாயார், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் துனிஷா சர்மா, சக நடிகரான சீசன் கானை காதலித்து வந்ததாகவும், அவரால்தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் துனிஷாவின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் நடிகர் சீசன் கான் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

முதற்கட்ட விசாரணையில் சீசன் கான், சமீபத்தில் டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த வழக்கின் பின்விளைவுகளை கண்டு, தான் காதலித்து வந்த நடிகை துனிஷா சர்மாவிடம் தனது உறவை முறித்துக்கொண்டதாக கூறியுள்ளார். இருவரும் வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்ததாலும் வயது வித்தியாசம் காரணத்தினாலும் ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில், அவருடன் உறவை முறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். சீசன் கானுக்கு 28 வயது என்பதும், நடிகை துனிஷாவுக்கு 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீசன் கான், துனிஷாவிடம் உறவை முடித்துக்கொண்ட பிறகு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த நேரத்தில் அவரைக் காப்பாற்றி துனிஷாவின் தாயாரிடம் துனிஷாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் போலீசாரிடம் சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே நடிகையின் தாயார், நடிகர் சீசன் தனது மகளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதேசமயம், சீசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தும், அவர் துனிஷாவுடன் தொடர்பைத் தொடர்ந்தார். இது ஒருகட்டத்திற்கு பிறகு சீசன், துனிஷா சர்மாவுடன் தனது உறவை முறித்துக் கொண்டார். அவளை மூன்று நான்கு மாதங்கள் பயன்படுத்தினார். சீசன் தண்டிக்கப்பட வேண்டும், அவரைத் தப்பவிடக் கூடாது" என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Bollywood Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe