Advertisment

“பெண் கல்யாணத்திற்காக சேத்து வச்சப் பணத்தில்...” -உண்மையை உடைத்த நடிகை துளசி

publive-image

சென்னையில் நேற்று (08/11/2022) நடைபெற்ற 'என்னை மாற்றும் காதலே" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை துளசி, "ஃபைனான்சியலி ரொம்ப ரொம்ப லோவா இருக்கிற ஒரு டைரக்டர் அவரு. ஒரு நல்ல படத்தை எடுத்துருக்காரு. நமக்கு வேண்டியது அதுதானுங்க. நான் குழந்தையா இருக்கும் போது, எங்க அம்மா என்னாயிடுவாங்களோ,ஏழு பேர் இருக்கிற குடும்பம் என்னாயிடுமோனுநினைச்சு, எங்க அம்மாவ பாத்துக்கிட்டே ஒரு நடிகையாகி, இன்னைக்கு இவ்வளவு கோடான கோடிக்கு நான் சொந்தமாயி, இவ்வளவு சந்தோஷமான வாழ்க்கை வாழ்றனா, இந்த சென்னை எனக்கு கொடுத்ததுங்க.

Advertisment

உங்களுக்கும் கிடைக்கும் டைரக்டர் சார். புரொடியூசர்க்கும் கண்டிப்பா கிடைக்கும். நாம கேட்டா கொடுக்கற அம்மா தான் சினிமா. உங்களுக்கு கிடைக்கும்; வெற்றி அடைவீங்க. நம்பிக்கையோட இருங்க. தயாரிப்பாளர் சொன்னது நிஜம் தான். தெரியாது தெரியாதுனு தமிழ அவ்வளவு அழகா பேசினாரு. தெரியாது தெரியாதுனு நல்ல படம் பண்ணிட்டாரு. கதாநாயகன் தங்கமான தம்பி. இங்க வேண்டியது வந்து நல்லவங்க அல்ல, வல்லவர்கள் என்று எல்லாரும் சொல்றாங்க. அந்த வல்லமையும் இருக்கு நடிப்புல. இந்தப் பொண்ணு ஒரு சிறந்த பான் இந்தியா ஹீரோயின் ஆவா. மிகச்சிறப்பான கண்கள், அழகான சிரிப்பு. நடிக்கும் போது துல்லியமான உச்சரிப்பு. இதை நான் பாத்துருக்கேன்.

Advertisment

ரித்திகா..நல்ல ஹீரோயினா, பெரிய ஹீரோயினா இருப்பமா. சந்தோஷமா இருக்கு.இதெல்லாம் அம்மாவா நினைச்சிப் பார்க்கறேன். எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் சொல்றேன்.சொல்லக் கூடாது. இந்த படம் எடுத்த பணம்... அவரது பெண் கல்யாணத்திற்காக சேத்து வச்சப் பணம் சார். அதுல இந்தப் படத்த எடுத்துருக்காரு. ஏன் சார் இதுனு கேட்டேன் நானு. இவ்வளவு ரிஸ்க்கா என்று கேட்டிருந்தேன். என்ன நடக்கும்னு தெரியாது. எஸ்... ஒரு நம்பிக்கையோட அம்மாவா நிக்கிறன். அவ்வளோ தான் எனக்கு தெரியும். பத்திரிகையாளர்கள் என்னோடு எப்போதும் இருந்ததுக்கு, இன்னும் சொல்லலாம் தலை வணங்கி, உங்க பாதங்களை நினைச்சு ஒன்னு பண்ண போறன் என்று சொல்லி" மேடையில் விழுந்து கும்பிட்டார்.

audio lanch function
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe