Advertisment

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹவுஸ் ஓனர்

actress tejaswini pandit shared his bad experience

மராத்தி தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை தேஜஸ்வினி பண்டிட். 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்த தேஜஸ்வினி முன்னதாகதனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தற்போது தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் கூறுகையில், "2009 அல்லது 2010 இருக்கும். அந்தச் சமயத்தில் புனேவில் சிங்ககாட் சாலை பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன். அப்போது என் நடிப்பில் ஓரிரு படங்கள்தான் வெளியாகியிருந்தன. ஒருநாள் நான் வீட்டு வாடகை செலுத்துவதற்காகக் குடியிருப்பு உரிமையாளர் அலுவலகத்திற்குச் சென்றேன். அப்போது நேரடியாக என்னிடம் பாலியல் உறவுக்கான பேரம் பேசினார். உடனே நான் மேஜையில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து அவரது முகத்தில் ஊற்றிவிட்டேன்.

Advertisment

பின்பு இதுபோன்ற செயல்களைச் செய்ய நான் நடிப்பு தொழிலுக்கு வரவில்லை. அப்படி சம்பாதிக்கும் நோக்கில் நான் இருந்தால், இப்படி வாடகைக் குடியிருப்பில் தங்கி இருக்கமாட்டேன். வீடு, சொகுசுகார் என செட்டிலாகி இருப்பேன். ஆனால், நான் அப்படி செய்யவில்லை என அவரிடம் கூறினேன்" என்றார்.

மேலும் பேசிய தேஜஸ்வினி, "இந்த நிகழ்வுகளை நாம் இரண்டு வகைகளாகப் பார்க்கலாம். ஒன்று எனது தொழில் மற்றொன்று பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பது. இவை இரண்டையும் வைத்துத்தான் என்னை அவர் மதிப்பிட்டார். இந்த அனுபவத்தைஒரு பாடமாக நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.

நடிகை தேஜஸ்வினிமராத்தி படங்களில் பிரபலமாக நடித்த நடிகை ஜோதி சண்டேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

marathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe