Skip to main content

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹவுஸ் ஓனர்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

actress tejaswini pandit shared his bad experience

 

மராத்தி தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை தேஜஸ்வினி பண்டிட். 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்த தேஜஸ்வினி முன்னதாக தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து தற்போது தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "2009 அல்லது 2010 இருக்கும். அந்தச் சமயத்தில் புனேவில் சிங்ககாட் சாலை பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன். அப்போது என் நடிப்பில் ஓரிரு படங்கள்தான் வெளியாகியிருந்தன. ஒருநாள் நான் வீட்டு வாடகை செலுத்துவதற்காகக் குடியிருப்பு உரிமையாளர் அலுவலகத்திற்குச் சென்றேன். அப்போது நேரடியாக என்னிடம் பாலியல் உறவுக்கான பேரம் பேசினார். உடனே நான் மேஜையில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து அவரது முகத்தில் ஊற்றிவிட்டேன்.

 

பின்பு இதுபோன்ற செயல்களைச் செய்ய நான் நடிப்பு தொழிலுக்கு வரவில்லை. அப்படி சம்பாதிக்கும் நோக்கில் நான் இருந்தால், இப்படி வாடகைக் குடியிருப்பில் தங்கி இருக்கமாட்டேன். வீடு, சொகுசு கார் என செட்டிலாகி இருப்பேன். ஆனால், நான் அப்படி செய்யவில்லை என அவரிடம் கூறினேன்" என்றார்.

 

மேலும் பேசிய தேஜஸ்வினி, "இந்த நிகழ்வுகளை நாம் இரண்டு வகைகளாகப் பார்க்கலாம். ஒன்று எனது தொழில் மற்றொன்று பொருளாதாரத்தில் பலவீனமாக இருப்பது. இவை இரண்டையும் வைத்துத்தான் என்னை அவர் மதிப்பிட்டார். இந்த அனுபவத்தை ஒரு பாடமாக நான் கற்றுக்கொண்டேன்" என்றார்.

 

நடிகை தேஜஸ்வினி மராத்தி படங்களில் பிரபலமாக நடித்த நடிகை ஜோதி சண்டேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Manohar Joshi passed away

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்.

மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி. அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.

1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். தற்போது 86 வயதான நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

இறந்து 3 நாட்கள் கழித்து பிரபல நடிகரின் உடல் சடலமாக மீட்பு

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Marathi actor and director Ravindra Mahajani passed away

 

மராட்டிய நடிகரும் இயக்குநருமான ரவீந்திர மகாஜானி (77), புனேவில் ஒரு வாடகை குடியிருப்பில் நேற்று சடலமாக மீட்கப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தகவலின் படி, நேற்று மாலை 4.30 மணியளவில் அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரைத் தொடர்புகொண்டனர். 

 

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துப் பார்க்கையில், ரவீந்திர மகாஜானி இறந்து கிடந்துள்ளார். உடலை மீட்டெடுத்த போலீசார் அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் எனச் சந்தேகிக்கின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. 

 

ரவீந்திர மகாஜானி, கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.