Advertisment

21 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

actress tabu joining ajith61 movie

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள'வலிமை' திரைப்படம்பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதிரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்கரோனாபரவலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்துநடிகர் அஜித்தின் 61வது படத்தை எச் வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ள படக்குழு, படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தனி அரங்கம் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'அஜித் 61' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இந்தி நடிகை தபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதைக்கு வயதான நடிகை தேவை என்பதால் தபுவைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2000ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தபு நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 21 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளதுகுறிப்பிடத்தக்கது

ACTOR AJITHKUMAR ajith Ajith 61 valimai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe