actress tabu controversy speech

காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான தபு இருவர், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்து வந்த தபு ஒரு காலகட்டத்தில் இந்தி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Advertisment

இந்த நிலையில் திருமணம் குறித்து தபு பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பேட்டியில், "அனைத்து பெண்களைப் போல எனக்கும் தாயாக வேண்டும் என்று ஆசை உள்ளது. திருமணத்திற்கும், குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் சம்பந்தமில்லை. நான் குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதற்காக கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. திருமணம் செய்யாமலேயே வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார். தபுவின் இந்த கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisment