Advertisment

மூத்த நடிகை தபஸ்ஸம் காலமானார்

actress Tabassum passed away

மும்பையைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகை தபஸ்ஸம்1947ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார். 1990வரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். தொலைக்காட்சியில் இந்தியாவின் முதல் டாக் ஷோவை தொகுத்து வழங்கிய பெருமை இவருக்கு உண்டு.

Advertisment

ad

இந்நிலையில் மூத்த நடிகை தபஸ்ஸம் தனது 78வது வயதில் நேற்று மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து நடிகை தபஸ்ஸம்மின் இரங்கல் கூட்டம் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4.30 மணி முதல் மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் நடைபெறவுள்ளதாக அவரது தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe