
இந்த லாக்டவுனில் பல படங்களை இயக்கி வரும் ராம் கோபால் வர்மா, 'நேக்ட்' என்றொரு படத்தையும் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரிலிருந்து, அனைத்துமே சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்வீட்டி, முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணாவை விமர்சித்துப் பேசியுள்ளார்.
அதில், “சுப்ரீம்' படத்தின் ஷூட்டிங்கின்போது அதிகாலை 3 மணிக்கு ராஷி கண்ணாவுக்கு புடவை கட்டிவிட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். உடனே கிளம்பி படப்பிடிப்புக்குச் சென்றேன்.
அப்போது நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டர், "ஏன் இந்த நேரத்தில் வந்தாய். இங்குதான் இவ்வளவு பெண்கள் இருக்கிறார்களே. அவர்கள் கட்டிவிடுவார்களே" என்று கேட்டார். நீண்ட தூரம் பயணித்துப் படப்பிடிப்புக்குச் சென்றேன்.
இதே போன்று பல முறை என்னை காக்கவைத்துள்ளார் ராஷி கண்ணா. இதன் மூலம் எனது சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)