கன்னட நடிகைசுவாதிக்குபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 20நாட்களாகபல் வலியால் அவதிப்பட்டு வந்த நடிகை சுவாதிஹென்னூரில்உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் அடுத்த சில தினங்களில் சுவாதியின் முகம் வீங்கி, கடுமையான பல் வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை சுவாதி மீண்டும் அந்த மருத்துவமனைக்குதனக்குச்சிகிச்சை அளித்த மருத்துவரிடம் முறையிட்டுள்ளார்.அதற்குஅந்த மருத்துவர் ஒரு சில தினங்களில் வீக்கம்தானாககுறைந்து விடும் எனக் கூறியுள்ளார். ஆனால் நடிகைசுவாதிக்குகடுமையான பல் வலி ஏற்பட்டதுடன், ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு அவரது முகம் வாங்கியுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம்தவறாகச்சிகிச்சை அளித்து எனதுமுகத்தைச்சீரழித்துவிட்டதாககூறிவீடியோபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தவறான சிகிச்சையால் என்னுடைய தொழில் வாய்ப்பை இழந்து விட்டேன். இது குறித்து விளக்கம் கேட்டால், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறது. இது குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" எனக் கூறியுள்ளார்.