actress supports nayanthara regards dhanush issue

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனால் பல்வேறு கட்டுபாடுகளுடன் இத்திருமணம் நடந்தது.

Advertisment

இத்திருமணம் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. இந்த ஆவணப்படம் வருகிற 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தாளன்று வெளியாகவிருந்தது. இதையொட்டி படத்தின் ட்ரைலர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு ட்ரைலரில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி பயன்படுத்தியிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் நெட்ப்ளிக்ஸ் வீடியோவில் பயன்படுத்தியதற்காக 3 விநாடிக்கு ரூ.10 கோடி கேட்டு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். இதனால், “நானும் தனது கணவர் விக்னேஷ் சிவனும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்து 3 பக்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் ‘Schadenfreude’ என்ற ஜெர்மனிய மொழியைப் பயன்படுத்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் நயன்தாராவுக்கு நடிகைகளில் ஆதரவு பெருகி வருகிறது. நயன்தாராவின் பதிவுக்கு பார்வதி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், மஞ்சிமா மோகன், பார்வதி, அஞ்சு சூரியன் உள்ளிட்ட நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment