/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/117_21.jpg)
தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் சுனிதா போயா. இவர் 'கீதா ஆர்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் பிரபல தயாரிப்பாளர் பன்னி வாசு மீது பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவரது அலுவலகம் முன்பு ஆடை இல்லாமல் போராட்டம் நடத்தியுள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த பெண் போலீசார், நடிகையை அழைத்துச் சென்று முதலில் உடைகளை உடுத்த வைத்தனர். பின்பு தயாரிப்பாளர் தற்போது அலுவலகத்தில் இல்லை என்றும், அவர் வந்தவுடன் அவரிடம் பேசுவதாக நடிகையிடம் கூறியுள்ளனர். பிறகு நடிகைக்கு போலீசார் பண உதவி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுனிதா போயா, பன்னி வாசு தயாரிப்பில் ஒரு படம் நடித்துள்ளதாகவும், இதற்காக சம்பளம் கேட்டபோது அவர் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. சுனிதா போயா, தயாரிப்பாளர் பன்னி வாசுக்கு எதிராக பல முறை போராட்டம் நடத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த மே மாதம் இதே அலுவலகத்தில்ரோட்டில் அமர்ந்து அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளார். அப்போதும்காவல் துறையினர் வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)