
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகை சுருதிஹாசன் தன்னுடைய வீட்டில் மரக்கன்றுகளை நட்டு வைத்த புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Thankyou @urstrulyMahesh and @ThisIsDSP for nominating me for the #GreenIndiaChallenge one more step toward a greener India? I nominate @iHrithik @RanaDaggubati and @tamannaahspeaks pic.twitter.com/zuYVP9HK0X
— shruti haasan (@shrutihaasan) August 12, 2020
திரைத்துறையில் இருப்பவர்கள் அடிக்கடி குறிப்பிட்ட நடிகர்களை டேக் செய்து சேலஞ்ச் விடுப்பது வாடிக்கையான ஒன்று. சேலஞ்ச் விடுக்கப்பட்ட பிரபலமும் அதைச் செய்து முடிப்பார்கள். இது அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று ஒன்றை தன் வீட்டில் நட்டார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அவர் நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை சுருதி ஹாசன் உள்ளிட்டவர்களை டேக் செய்து இதனைத் தொடர்ந்து நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று நடிகை சுருதிஹாசன் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு அவரது வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளார்.