/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/145_22.jpg)
திரைத்துறையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பலமொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996 இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
2018 இல் துபாயில்இருந்த போது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றபோது குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவரது கணவர் போனி கபூர் தயாரிப்பாளராகவும் மகள் ஜான்வி கபூர் நடிகையாகவும் திரைத்துறையில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீதேவியின் வாழ்க்கைகதைபுத்தகமாக வெளியாகவுள்ளது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுத வெஸ்ட்லேண்ட் புக்ஸ் நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த போனி கபூர் இந்த ஆண்டு இப்புத்தகம் வெளியாகும் எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)