sona

Advertisment

நடிகை சோனா ஆபிரகாம் பதினான்கு வயதாக இருந்தபோது, 'ஃபார் சேல்' என்கிற பாலியல் வன்புணர்வுக்கு எதிரான படம் ஒன்றில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் படுக்கை அறை காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும், அது சமூக வலைதளங்கள் முதல் ஆபாசப்படத் தளங்கள் வரை பரவியுள்ளது.

தற்போது சோனா, சட்டப் படிப்பை படித்து வருகிறார். அண்மையில், சமூக வலைதளங்களில் பரவி இருக்கும் அந்தக் காட்சியை நீக்கக்கோரி போலீஸிடம் புகார் அளித்தார். இதன்பின்னும் அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, 'ஃபார் சேல்' என்ற மலையாளப் படத்தில் நடித்ததாகவும், படத்தில் தான் பலாத்காரம் செய்யப்படுவதைப் பார்த்ததும் சகோதரியான காதல் சந்தியா தற்கொலை செய்து கொள்வது போலவும் படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி கதை அமைத்திருந்தார்.

Advertisment

150 பேர் முன்னிலையில் பலாத்கார காட்சியைப் படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில், நான் நடிக்க மறுத்ததால், என்னை வற்புறுத்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து, பலாத்கார காட்சியை படமாக்கினார்கள். அந்தக் காட்சி குறித்த புரிதல் ஏதும் அப்போது எனக்கு இல்லை. 10ஆம் வகுப்பு படித்து வந்த நான் மறுநாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்குச் சென்று விட்டேன்.

அந்தப் படம் வெளியான போது கூட முறையாக எடிட் செய்யப்பட்டு ஆபாச காட்சிகள் இல்லாமல் வெளியானது. ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத ஆபாச காட்சிகளைசமூக வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டுள்ளனர்.

அது பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பு எனது கவனத்துக்குத் தெரியவந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு அதனை, நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள முதல்வர், டி.ஜி.பி, சைபர் கிரைம் காவல்துறையினர் என அனைவரையும் சந்தித்து புகார் அளித்தேன்.

Advertisment

ஆனால், அந்த வீடியோக்களை நீக்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஆபாச இணையதளங்களிலும் தொடர்ந்து பரவிவருவதால், பல தரப்பில் இருந்தும் எனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றேன்” என்று தெரிவித்துள்ளார்.