Skip to main content

“என்னை கவர்ச்சி நடிகை என சித்தரிக்க வேண்டாம்” - நடிகை சோனா வருத்தம்!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி  தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது.
 

sona

 

 

இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனா கவர்ச்சியனா உடை அணிந்ததது பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.  மேலும் இப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் சோனா.

"பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில்   பெண்கள்   எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்  தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘நாதுராம் கோட்சே’ திரைப்படம்; வெளியீட்டுக்கு முன்பே கிளம்பிய எதிர்ப்பு 

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Opposition to the movie 'Nathuram Godse'

பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய கிடுகு திரைப்படத்தின் இயக்குநர் வீர முருகன், நாதுராம் கோட்சே என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே இந்த இயக்குனர் எடுத்த கிடுகு திரைப்படத்தில், வேளாங்கண்ணி மாதா கோயில், முன்பு இந்துக் கோயிலாக இருந்தது எனவும், தற்போது அங்கு மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது எனப் பல்வேறு சலசலப்பை இந்தத் திரைப்படத்தில் பதிவு செய்து பீதியைக் கிளப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில், சங்கி, நீட், காடுவெட்டி, ஆணவக்கொலை, திராவிட மாடல், விடுதலை சிறுத்தை, சாத்தான்குளம் என எக்கச்சக்கமான குறியீடுகள் காட்டப்பட்டிருப்பதாக மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது. 

முற்போக்கு அரசியல் பேசும் பலரையும் கடுமையாக விமர்சிக்கும் இந்தப் படத்தில், இந்து அறநிலையத்துறை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேசியிருந்ததால் இந்தப் படத்தை வெளியிடுவதில் மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக யூடியூப் சேனல் ஒன்றில் இந்தப் படத்தினை வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த இயக்குநர் தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் வேளையில், மதுரையில், இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியீடு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டுள்ளார். 

மேலும், படத்தில் நடித்த திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அர்ஜூன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்த போது, கிடுகு திரைப்படத்தை தயாரித்து, பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலே, அதை யூட்டியூப்பில் வெளியிட்டு, உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழ் ரசிகப் பெருமக்களின் பேராதரவைப் பெற்ற அந்தப் படக் குழுவினருக்குப் பாராட்டு விழா நடத்துவதாகவும், கிடுகு திரைப்படத்தில் திராவிட இயக்கங்களின் முகத் திரையை கிழித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்ததால் இந்தப் பாராட்டு விழா என்றும் கூறியிருக்கிறார். மேலும், இவர்களின் அடுத்த தயாரிப்பான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கிடுகு திரைப்படம் வெளியீட்டிற்கு எப்படி இந்து மக்கள் கட்சி துணை நின்றதோ அது போல் நாதுராம் கோட்சே திரைப்படத்திற்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் இந்துக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கருத்துகள் இடம் பெற்று இருக்கின்றன. ஏழு எட்டு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். எனவே இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் திமுக அரசின் அச்சுறுத்தலால் திரை அரங்குகளில் வெளியிடப்படாமல் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும், தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயரை வைப்பது எதற்காக? எனவும், கலைஞருக்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த வளாகத்தில் தீரன் சத்தியமூர்த்தி சிலை கலைஞரின் காலடியில் இருப்பது போல கலைஞருக்கு மிகப் பெரிய சிலை வைத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். 

மேலும் தொடர்ந்து பேசியவர், திமுக ஆட்சி செய்யும் போது எல்லா இடத்திலும், கலைஞரின் சிலை, தந்தை பெரியாரின் சிலை போன்றவற்றை வைத்து, தமிழ்நாட்டில் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதற்கு முயற்சி செய்வதாகவும், தமிழ்நாட்டில் தேசியத் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வண்ணமும் இவ்வாறு திட்டமிட்டு செய்வதாக கூறியிருக்கிறார். இதனால், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் கருத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்தியா முழுக்க படித்த பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் வெளி நாடுகளுக்கு சென்று மிகவும் சிரமப்படும் வேளையில், இது போன்று மத கலவரத்தை உண்டு செய்யும் படங்களை எடுத்து தமிழகத்தில் கலவரம் செய்ய விழைகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை'- பாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

nn

 

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (21.11.2023) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி, கலை பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், பல்கலைக்கழக துணைவேந்தர் சீ. சௌமியா, பல்கலைக்கழக பதிவாளர் சிவசௌந்தரவள்ளி, கர்நாடக இசைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எம். கிருஷ்ணா, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கும், கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் மேலைநாட்டு இசைக் கலைஞர் பி.எம். சுந்தரத்திற்கும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாடகி பி. சுசீலாவின் இருக்கைக்கே சென்று மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதையடுத்து மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

 

பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “பாடகி பி. சுசீலா, பி.எம். சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். நான் எப்போதுமே வெளியூருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது காரில் அவருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டே போவேன். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, அடிக்கடி நான் பல இடங்களில் அதைப் பாடியிருக்கிறேன். ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை’. அதனால் மேடைக்கு வந்தவுடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டுத்தான், நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவே சொன்னேன்'' என்றார்.