actress shruti haasan replies her fan about plastic surgery

Advertisment

தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிக்கும்'சலார்'படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதனிடையே பல படங்களில் பிஸியாகநடித்து வரும் ஸ்ருதிஹாசன்அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம்.

அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில்ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் இதுவரை எத்தனை முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறீகள்என்று கேள்வி எழுப்பிருந்தார். இதை கேட்டு கடுப்பான ஸ்ருதிஹாசன்,"நான் எத்தனை முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தால் உங்களுக்கு என்ன? அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். அதை பற்றி கேட்க வேண்டிய அவசியமும் உங்களுக்கு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன் எனது மூக்கு பகுதியில் மட்டும் தான் பிளாஸ்டிக் சர்ஜரிசெய்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.