/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/73_28.jpg)
தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன் தற்போது பிரபாஸ் நடிக்கும்'சலார்'படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதனிடையே பல படங்களில் பிஸியாகநடித்து வரும் ஸ்ருதிஹாசன்அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம்.
அந்த வகையில்நேற்று (9.2.2022) தனது சமூக வலைதள பக்கத்தில்ரசிகர்களுடன் உரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், "நீங்கள் தென்னிந்திய சினிமாவில் இருந்து வருகிறீர்கள், உங்களுக்கு இந்தி தெரியுமா...? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், "நாங்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகிறோம். கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம். இந்த2022ல் இனம், மொழி உட்பட பாரபட்சம் எல்லாம் பார்ப்பதற்குஎங்களுக்கு நேரம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)