/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/285_21.jpg)
சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் இந்தியா பிரபலங்களில் பொறுத்தவரை அதிக பின்தொடர்வோர் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். அவரை 271 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதையடுத்து இரண்டாவது இடத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இருக்கிறார். அவரை 91.8 மில்லியன் பார்வையாளரக்ள பின் தொடர்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் 91.3 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டு பிரதமர் மோடி இருந்தார். ஆனால் தற்போது அவர் நான்காவது இடத்திற்குச் சென்றுள்ளார். மூன்றாவது இடத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இருக்கிறார். அவர் தற்போது 91.4 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்வோர் கொண்ட பட்டியலில் விராட் கோலி, பிரியங்கா சோப்ராவிற்கு பிறகு ஷ்ரத்தா கபூர் இடம்பெற்றுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வரும் ஷ்ரத்தா கபூர், அமர் கௌசிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் நடிப்பில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஸ்ட்ரீ 2’ இந்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.350 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)