Skip to main content

திருட்டில் சிக்கிய பணிப்பெண் - ஷோபனா செய்த நெகிழ்ச்சி செயல்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

actress shobana house money theft issue

 

90களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை ஷோபனா. மேலும் பரதநாட்டியக் கலைஞராகவும் இருந்து வருகிறார். சென்னை தேனாம்பேட்டையில் இரண்டடுக்கு மாடிகொண்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். தரைத்தளத்தில் பரத நாட்டியப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் ஷோபனா, முதல் தளத்தை தாயார் ஆனந்தத்துக்கு கொடுத்துவிட்டு, இரண்டாம் தளத்தில் வசித்து வருகிறார். 

 

ad

 

ஷோபனா வீட்டில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த விஜயா என்ற பெண் கடந்த ஒரு வருடமாக வீட்டில் தங்கி அவரது தாயாரைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக, முதல் தளத்தில் வசிக்கும் தாயார் ஆனந்தம் வைத்திருந்த பணம் காணாமல் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். மேலும் வீட்டின் பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 

இதன் அடிப்படையில் ஷோபனா வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். விஜயா, கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொஞ்சம் கொஞ்சமாக ரூ.41 ஆயிரம் வரை திருடியது தெரியவந்தது. மேலும் திருடிய பணத்தைக் கார் ஓட்டுநர் முருகன் மூலம் ஆன்லைன் வாயிலாக ஊரில் உள்ள மகளுக்கு அனுப்பியுள்ளார். 

 

பின்பு வறுமையின் காரணமாகத் திருடியதாகத் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஷோபனா புகாரை வாபஸ் பெற்றார். பின்னர் விஜயாவையே பணிப்பெண்ணாக நியமித்து திருடிய பணத்தைச் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளார். 

 

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், பணிப்பெண் தங்க நகைகள், வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் உள்ளிட்ட  60 சவரனுக்கு மேல் திருடியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றிணைந்த மோகன் லால் - ஷோபனா ஜோடி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
mohanlal shobana at shooting spot of l 360

மலையாள முன்னணி நடிகர் மோகன் லால், கடைசியாக லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை அடுத்து பிரித்விராஜ் இயக்கத்தில் ‘எல்.2 - எம்புரான்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் மோகன்லாலின் 360ஆவது படம், தற்காலிகமாக எல்360 என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தை தருண் மூர்த்தி இயக்க ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் 15 வருடங்களுக்கு பிறகு மோகன் லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்னால் 55 முறை இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அந்த அளவுக்கு இவர்களின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது . 

இந்தச் சூழலில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலும், ஷோபனாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Next Story

33 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாகும் நடிகை 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ, வருகின்ற 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அந்த போஸ்டரில் ரஜினி வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். மேலும் கையில் கடிகாரத்தை விலங்காக கட்டியிருந்தார். இதை வைத்து ஏகப்பட்ட கதைகள் ரசிகர்களால் யூகிக்கப்பட்டது.

 

shobana to pair with rajini in thalaivar 171 after 33 years

இந்த நிலையில் இப்படத்தில் ஷோபனா நடிக்க, அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் தளபதி படத்திற்குப் பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.