Advertisment

ஷிவானிக்கு அடித்த 'பம்பர்'... குவியும் பட வாய்ப்புகள்

actress shivani starring bumper movie

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ஷிவானி தற்போது படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்து வரும் ஷிவானி பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும்நடித்து வருகிறார். இதனிடையே ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில், ஷிவானி கதாநாயகியாக நடிக்கும் 'பம்பர்' படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கும் இப்படத்தில் '8 தோட்டாக்கள்' பட புகழ் வெற்றிக்கு ஜோடியாக ஷிவானி நடித்து வருகிறார். இப்படம் கேரளா மாநில லாட்டரிகளைமையமாக வைத்து உருவாகி வருகிறது. வேதா பிச்சர்ஸ்தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த்வசந்தா இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புதொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

RJ Balaji vikram movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe