Skip to main content

எக்ஸ்ட்ரீம் காதலை எந்த வார்தையில் சொல்லமுடியும்? - ஷில்பா மஞ்சுநாத்தின் ஜாலி பேட்டி

Published on 15/03/2019 | Edited on 15/03/2019


விஜய் ஆண்டனியின் ‘காளி’படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். அடுத்ததாக இஸ்பேட் ராஜா இதய ராணி படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பற்றி ஷில்பா அளித்த ஜாலியான பேட்டியின் தொகுப்பு.

 

shilpa manjunath


 

இந்தப் படத்தில் உங்களுடைய கேரக்டர் எப்படி இருக்கும்?
 

என் கேரக்டர் பேரு தாரா, எல்லா பசங்களும் இதமாதிரி பொண்ணுதான் வேணும்னு நினைக்குற அளவுக்கு ஸ்வீட் கேர்ல் தாரா. ஒரு பணக்கார நாகரீகமான குடும்பத்துப் பொண்ணு. ஆனால், கௌதம் இதுக்கு அப்படியே எதிர்மறையான கேரக்டர். இவங்களுக்கு நடுவில் இருக்க லவ் ஸ்டோரி தான் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. 
 

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கதைச் சொல்லும்போது அதில் எந்த விஷயம் உங்களுக்குப் பிடிச்சது?
 

மற்ற காதல் படங்களில் இருந்து இந்தப் படத்தோட கிளைமேக்ஸ் வேறமாதிரி இருக்கும். பார்க்கிற எல்லோருக்கும் இந்த மாதிரியும் லவ் பண்ண முடியுமா? நம்மலாம் என்ன லவ் பண்ணிருக்கோம்னு யோசிக்க வைக்கும். ஒருத்தர் மேல இருக்கிற காதலை எப்படி வெளிப்படுத்த முடியும், லவ் யு சொல்லலாம், நான் எவ்வளவு அக்கரையா இருக்கேன்னு சொல்லலாம். ஆனால், எக்ஸ்ட்ரீம் காதலை எந்த வார்தையில் சொல்லமுடியும்? வார்த்தைகள் இல்லாதபோது முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்துறோம். அப்படியொரு எக்ஸ்ட்ரீம் காதல்கதையைத்தான் ரஞ்சித் ஜெயக்கொடி சொன்னார். அதைக் கேட்கும் எல்லோரும் ஃப்ளாட் ஆகிடுவாங்க.
 

இது ரொம்ப மொரட்டுத்தனமான காதலா இருக்கும்னு கேள்விப்பட்டோமே?
 

கண்டிப்பா. எல்லா காதலிலும் மோரட்டுத்தனம் இருக்கும். பையன் சாதுவாக இருந்தால் பொண்ணு மொரட்டுத்தனமாக இருப்பாங்க, பொண்ணு சாதுவாக இருந்தால் பையன் மொரட்டுத்தனமாக நடந்துப்பாங்க. இந்தப் படத்தில் தாரா சாதுவான ஸ்வீட் கேர்ல், அதனால் கௌதம் மொரட்டுத்தனமா இருப்பான். கௌதம் பொதுவாவே கேர்லஸா இருக்கிற மொறடன். பெண்களுக்கு இந்தமாதிரி இருக்கிற பசங்கள பிடிக்கும், எனக்கும் இந்தக் கேரக்டர் ரொம்ப பிடிக்கும்.  
 

லடாக்கில் சூட்டிங் நடந்திருக்கு. அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?
 

நாங்கள் லடாக்கில் நிறைய இடங்களுக்குப் போகலாம்னு திட்டம் போட்டோம். ஆனால், எங்கேயும் போக முடியல. எப்பவும் சூட்டிங் இருந்துச்சு. இருந்தாலும் நான் சூட்டிங்க நல்லா எஞ்சாய் பண்ணுனேன். ஒருமுறை லடாக் மலைமேல் ட்ரக்கிங் போனோம், எந்த வண்டியும் போக முடியாது, 2 மணிநேரம் நடந்தேதான் போகனும். மேலே போனால்தான் பனி மலையைப் பார்க்க முடியும். அந்த இடத்தில் ஒரு ஷாட் எடுக்கனும், அந்த ஒரே ஒரு ஷாட்டுக்காக மொத்த குழுவும், எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு மேல நடந்துப் போனோம். 
 

படத்தோட ட்ரைலர்லேயே லிப் லாக் சீன் இருந்துச்சு. அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு? அதுக்கு எத்தனை டேக் எடுத்துக்கிட்டீங்க?
 

முதல் முறை எடுக்கும்போது ஒரு டேக்லயே பண்ணிட்டொம். இன்னொரு சீனிலும் லிப் லாக் வரும், அந்த சீனில், க்லோசப், ட்ராலி, லாங் ஷாட் அப்படினு மாறி மாறி ஐந்திலிருந்து ஆறு டேக் போச்சு.
 

இதுக்கப்பறம் உங்களை எந்தமாதிரி எதிர்பார்க்கலாம்?
 

இன்ஜினியரிங்ல இருந்து சினிமாவுக்கு வந்தாச்சு, மிஸ் கர்நாடகா பட்டமும் வாங்கியாச்சு, இதுக்கப்புறம் என்னை ஒரு நடிகையாக எதிர்ப்பார்க்கலாம், ஆனால் ஹீரோயினாக வருவேனா என தெரியாது. எனக்கு எல்லா கேரக்டர்லயும் நடிக்கனும். விஜய் சேதுபதி மாதிரி நிறைய வித்தியாசமான ரோல்ஸ் பண்ணனும்.  



 

சார்ந்த செய்திகள்