Advertisment

ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் - பிரபல நடிகைகளால் பரபரப்பு

actress sherlyn chopra and rakhi sawant complaint against each other

Advertisment

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராக்கி சாவந்த், தமிழில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான 'என் சகியே' மற்றும் 2009ல் வெளியான 'முத்திரை' படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் ராக்கி சாவந்தை நடிகை ஷெர்லின் சோப்ரா, "ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனர்" என விமர்சனம் செய்திருந்தார். தன்னை இழிவுபடுத்திய நடிகை ஷெர்லின் சோப்ரா மீது மும்பை போலீசில் நடிகை ராக்கி சாவந்த்புகார் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து ஷெர்லின் சோப்ரா, தற்போது நடிகை ராக்கி சாவந்த்மீது மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "ராக்கி சாவந்த்தன்னைப்பற்றி தவறான கருத்துக்களைப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். பொது இடத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இழிவாகப் பேசியுள்ளார். பொது இடத்தில் பெண்களை இழிவுபடுத்திப் பேச சட்டத்தில் இடம் இல்லை. எனவே ராக்கி சாவந்த் மற்றும் அவரது வக்கீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இரு நடிகைகளும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருவதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தந்த நடிகைகள் கொடுத்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட நடிகை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Actress Bollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe