/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_23.jpg)
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வருபவர் மாடல் அழகிஷெர்லின் சோப்ரா. தமிழில் ஜீவன் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான 'யுனிவர்சிட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். பின்பு தொடர்ந்து இந்தியில் பல படங்கள் நடித்த நிலையில் 2018க்கு பிறகு எந்த படங்களும் அவரது நடிப்பில் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஷெர்லின் சோப்ரா, பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி சமூகம் குறித்து பேசிய அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் கொடுத்த இரண்டாண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்போது நிறுத்திவைத்தது தொடர்பாக தனது வாழ்த்துகளை கூறுகிறார். அப்போது சோப்ராவிடம் ராகுலை திருமணம் செய்துகொள்ள தயாரா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு சிரித்து கொண்டே பதிலளித்த அவர், "திருமணம் செய்து கொள்ள தயார். ஆனால் ஒரு கண்டிஷன். திருமணத்திற்கு பிறகு என் பெயரில் இருக்கும் சோப்ராவை மாற்றக்கூடாது" என பதிலளித்தார்.
Follow Us