நடிகையாகவும் மாடலாகவும் வலம் வந்தவர் ஷெஃபாலி ஜரிவாலா(42). இவர் ஆல்பம் பாடலான ‘காந்தா லகா’ மூலம் கவனம் ஈர்த்தார். பின்பு இந்தியில் சல்மான் கான் நடித்த ‘முஜ்சே ஷாதி கரோகி’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ‘நாடோடிகள்’ பட கன்னட ரீமேக்கான ‘ஹுடுகரு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
சினிமாவைத் தாண்டி சின்னத்திரையில் பிக் பாஸ் 13 மற்றும் நடன நிகழ்ச்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் சீரியலிலும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் உள்ள அவர் இல்லத்தில் நள்ளிரவில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது கணவரும் நடிகருமான பராக் த்யாகி கொண்டு சென்றுள்ளார். ஷெஃபாலியை சோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக சொல்லியுள்ளனர். இதையடுத்து உடற்கூறாய்வுக்கு அவரது உடல் அனுப்பப்பட்டுள்ளது.
இவரது மரணம் குறித்து பேசிய மும்பை காவல் துறையினர், “அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடிகையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து எங்களுக்கு அதிகாலை 1 மணிக்கு தகவல் கிடைத்தது. மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்றுள்ளார். நடிகையின் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/06/28/41-2025-06-28-12-54-08.jpg)