Actress Sheetal Thamby demands Rs 5 crore in compensation from Manju Warrier

அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை மஞ்சு வாரியர், அடுத்ததாக அஜித்தின் துணிவு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனின் விடுதலை 2, ரஜினியின்வேட்டையன், ஆர்யாவின்மிஸ்டர்எக்ஸ்ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகியுள்ளஃபுட்டேஜ்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் கலவையானவிமர்சனத்தைப்பெற்று வருகிறது. இருப்பினும் பாலிவுட் நடிகர்அனுராக்கஷ்யப்இப்படத்தைப்பாராட்டியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகைசீத்தல்தம்பி மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டுநோட்டிஸ்அனுப்பியுள்ளார். அந்தநோட்டீஸில், “ஃபுட்டேஜ்படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால்தனக்குகாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில்ஆம்புலன்ஸ்உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் எனது உடல்நிலை மேலும் மோசமானது.

அப்படத்தில் நடிக்க தனக்கு ரூ1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது ஆனால் அப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களுக்கானமருத்துவசிகிச்சைகளுக்குப்பல லட்சம் செலவானது. ஆகவே என்னுடைய காயங்கள் மற்றும்மருத்துவசெலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.