ஷாலு ஷாமு இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்டபல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இப்போது நயன்தாரா முதல் தமிழ் சினிமா ஹீரோயின்கள் பலருக்கும் தோழி கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில் அவரது குளியல் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இதற்கு முன்பு தன் ஆண் நண்பர் ஒருவருடன் அவர் நடனமாடிய வீடியோ வைரலானது. இப்படி தொடர்ச்சியாக இவரைச் சுற்றி சர்ச்சைகள் உலவி வந்த நிலையில் இப்போது அவர் தன் வலைத்தள பக்கத்தில் பிகினியுடன் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இப்படியான வீடியோவை பதிவேற்றலாமா என விமர்சித்து வருகிறார்கள்.