Advertisment

பூங்காவில் இளம் நடிகையிடம் அத்துமீறல் - இளைஞரை கைது செய்த போலீசார்

actress shalu chourasiya face a tricky situation in park

Advertisment

தெலுங்கு திரையுலகில் மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் ஷாலு சவுராசியா. வளர்ந்து வரும் ஹீரோயினாக வலம் வரும் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருக்கும் கே.பி.ஆர் பூங்காவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தன்னை ஒருவர் பின் தொடர்வதாகக் கூறி புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அதே பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது தன்னை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்து அத்துமீற முயன்றதாகக் கூறி புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் ஷாலுவை துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபரைக்கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது.

ஒரே பூங்காவில் இரண்டாவது முறையாக தான் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக நடிகை புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress hyderabad tollywood
இதையும் படியுங்கள்
Subscribe