Advertisment

இளம் நடிகை மர்ம மரணம்; போலீஸ் தீவிர விசாரணை

actress Shahana passed away

கேரள மாடல் அழகியும், நடிகையுமானசஹானா(20) இன்று தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். ஒரு சில மலையாள படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு கோழிக்கோட்டைசேர்ந்த சஜ்ஜாத்என்பவரைதிருமணம் செய்துகொண்டார்.அதன் பிறகு கோழிக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வந்த சஹானா இன்று நீண்ட நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது கணவர் கதவை திறந்து பார்த்தார். அப்போது சஹானா வீட்டின்ஜன்னலில் தூக்கு போட்டு இறந்து கிடந்துள்ளார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோழிக்கோடு போலீசார் சஹானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். சஹானாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் சஹானாவின்கணவர் சஜ்ஜாத்அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்துசஹானாவின்கணவர் சஜ்ஜாத்திடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

kerala police Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe