/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/433_14.jpg)
தனது முதல் தெலுங்குத் திரைப்படமான 'நாட்டியம்' படத்திற்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர் சந்தியா ராஜு. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தொழில்துறையின் தலைவர் தொழிலதிபர் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஹைதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலா ஃபிலிம்ஸின் நிறுவனராக சந்தியா ராஜூ உள்ளார். குச்சிப்புடியின் கிளாசிக்கல் நடன வடிவத்திற்கு ஜோதி கொடுத்து, அதை தனது நேரடி நிகழ்ச்சிகள், நடன அகாடமி மற்றும் சினிமா மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரால் 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சிறப்புமிக்க நிகழ்வாக நடக்கும் ‘அட் ஹோம்’ நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 15 மாலையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் கொடியேற்ற விழாவைத் தொடர்ந்து உடனடியாக இது தொடங்குகிறது.
சந்தியா ராஜு தனது நன்றியைத் தெரிவித்து பேசியதாவது, "இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரால் அழைக்கப்படுவது எனது கௌரவமும் மரியாதையும் ஆகும். இந்த அழைப்பு இதுவரை நான் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அடையாளமாகவும் உள்ளது. குச்சிப்புடி நடனம் மற்றும் தெலுங்கு சினிமாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உயர்த்துவதற்கு என் நாட்டிற்கான பொறுப்பாகவும் இதை உணர்கிறேன். டெல்லியில் நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)