பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளியாகி செம ஹிட்டான காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சந்தியா. அதன்பின் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சந்தியா, பட வாய்ப்புகள் குறைந்தபின் 2015ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இதன்பிறகு, இவர் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கொண்டார்.
இந்நிலையில் காதல் சந்தியா தற்போது பிரபலமான சீரியலில் ஒன்றில் நடிக்கிறார். அதற்கான புதிய ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சஞ்சீவ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில் தற்போது கண்மணி சீரியலில், காதல் சந்தியா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.