Advertisment

விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா... குழப்பத்தில் ரசிகர்கள்!

actress Samantha divorce post removed on social media

Advertisment

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் 'மெர்சல்', 'கத்தி', 'தெறி', 'இரும்புத்திரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, கடந்த ஆண்டு அவரைவிவாகரத்து செய்தார். இது தொடர்பான ஒரே மாதிரியான விவாகரத்து அறிக்கையை நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த விவாகரத்து குறித்தபதிவை தற்போது நீக்கியுள்ளார். ஆனால் நடிகர் நாக சைதன்யா அந்த பதிவை நீக்காமல் வைத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் சிலர்நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் மீண்டும் இணைவர்களா என்ற கோணத்தில் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe